29 ஜேசுதாசன் போன்றவர்களோடு, பிரதிநிதியாகச் சென்றி ருந்தாராம். சென்னைத் தலைவர்கள், மாநாட்டில் அண்ணாவுக்கு உரிய இடம் அளிக்காமல், தங்கள் பின்னால் ஓடிவரக்கூடிய 'ஆட்டுக்குட்டி' போல நடத்தினார்களாம். மாநாட்டுத் தலைவர்களிடம் வனாவை அறிமுகம் செய்து வைப்பதையும் அவர்கள் ஒரு பொருட்டாகக் கருத வில்லையாம். மாநாட்டில் அண்ணா அவர்கள் ஒரு தீர்மானத்தின்மீது சிறிது நேரம் பேசவேண்டிய வாய்ப்பு கிடைத்ததாம். மாநாட்டினர் வீணா அவர்களின் பேச்சில் ஒன்றித் திளைத்து,மகிழ்ந்து, தணியாப் பற்றுக் கொண்டுவிட்டனராம். பிறகு மாநாடு முடியும் வரையில் தலைவர்கள் அண்ணாவைக் கண்டு பேசவிரும்புவதும். தொண்டர்கள் அண்ணாவின் பின் ஒடுவதும் ஆன காட்சி கள், மற்ற சென்னைத் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் மறக்கடித்து விட்டனவாம். மாதாட்டின் விஷயாலோசனைக் குழுக்கூட்டத்தில் அண்ணா அவர்களின் கூற்றுக்கு நல்ல மதிப்பும், செல்வாக்கும் இருந்தனவாம். அந்த மாநாட்டில்தான் அண்ணா அவர்கள் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற்சங்க காங்கிரசில் ஈடுபட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களை நேரடி அரசியல் கட்சியிலஈடுபடும்படி செய்தவர். தோழர் "சண்டே அட்ஸர்வர் பி. பால சுப்பிரமணியம் ஆவார்கள். மன்றம் 1-5-54
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
