பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவும் ஆச்சாரியாரும் அறிஞர் அண்ாை அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிய காலத்தில் காலத்தில் பொதுவிவாதக் கூட்டங்களில் தாமே சென்று வலுவில் கலந்துகொள்வது அவரது வியப்புக்குரிய பழக்கமாக இருந்தது. சென்னையில், பொதுமண்டபங்களில் விவாதக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்போதெல்லாம், அறிஞர் அண்ணாவை அம்மண்டபங்களில் பார்த்துக் கொள்ளலாம். அண்ணா அவர்கள் வந்து கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற உணர்வு, கூட்டத்தினரிடையே பரபரப்பையும் தலைவர் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். கூட்டத்தின் அன்று எடுத்துக் கொள்ளப்படும் பொருள் குறித்து ஒட்டியோ வெட்டியோ பேசுவோர் கூட்டத்தில் உண்டா கேட்டுவிட்டால் போதும். உடனே அண்ணா அவர்கள் மேடைமீது தாவி, தம் கருத்துக்கு இயைந்த பக்கத்தில் நின்று சொல்லம்புகளை மாற்றார் தடுக்கவும் தயங்கவும் இயலாத வகையில் தொடுப்பார். கூட்டம் என்று பெரும்பாலும் அண்ணாவின் பக்கம் நிற்கும். ஒருபொழுது சென்னை ஒய்.எம்.சி.ஏ.விலாத மன்றத் தில் 'ஆயைப் பிரவேசத்துக்கு ஆகமத்தின் அனுமதி தேவையா?" என்ற பொருள் பற்றித் தோழர் சி. இராஜ கோபாலாச்சாரியார் தலைமையில் ஒரு விவாதக் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு அண்ணாவும் சென்றிருந்