31 தார். பொருளை ஒட்டியும் வெட்டியும் சிலர் பேசினர். அண்ணா அவர்கள் பேசும்வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு மேடைமீது பாய்ந்து நின்று, ஆலயப்பிரவேசத்துக்கு EG ஆகமத்தின் அனுமதி அவசியமில்லை என்பது பற்றிப் பேசத் தொடங்கினார். கடல்மடை திறந்தாற்போல் அண்ணா வின் வாயினின்றும் கருத்துவெள்ளம் கரைபுரண்டு வந்து கொண்டேயிருந்தது. அண்ணாவின் பேச்சு காரசாரமாக இருப்பதைக் கண்ட ஆச்சாரியார் அடிக்கடி சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்றார். அண்ணா அவர்கள் சற்று வில நின்றுகொண்டு, ஆலயப் பிரவேசத்துக்கு ஆகம சாஸ்திரத்தின் அனுமதி உண்டா என்று ஆராயத் தொடங்குகிறார்கள் சிலர். தலைமை வகிக்கும் ஆச்சாரி யார் எந்த ஆகம சாஸ்திர விதியை ஆராய்ந்து காந்தியார் மகனுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுத்தாரி?" என்று பேசிக்கொண்டு செல்லும்போது, சொந்த விஷயத்தைப் பற்றிப் பேசாதே!" என்று எச்சரிக்கை செய்தார். உடனே அண்ணா அவர்கள், ஆச்சாரியார் பக்கம் திரும்பிப் பார்த்து, நீர் பொதுச் சொத்தாக்கப்பட்டு விட்டீர். உமக்கு உமக்கு என்று சொந்த விஷயம் இருப்பதாக யாரும் ஏற்பதில்லை. உமது ஒவ்வொரு நடவடிக்கையை யும் பொதுமக்கள் கவனித்தே தீருவர்' என்று காரசாரமாக விடையிறுத்தார். தோழர் • எப்படி ஆச்சாரியர் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த "scort டி.செங்கல்வராயனிடம், விஷத்தைக் கக்குகிறான் என்று பார்" என்று சொல்லி ஆயாசப்பட்டுக் கொண்டார். அன்றுதான் அண்ணாவின் சொல்லாற்றலை ஆச்சாரியார் முதன் முதல் அறிந்து கொண்டார். மன்றம், நாள் 15-5-54
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
