பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவும் கழகமும் 1937-38-39-ம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட் டம் வீறிட்டெழுந்து, . ஆணவ ஆட்சியை அலக்கழித்துக் கொண்டிருக்க, அதற்குள் ஆச்சாரியார் அமைச்சர் குழு உலகப் பெருமபோரில் பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு நல்க மறுத்துப் பதவியைவிட்டு வெளியேற, அது வெளியேறிய வுடன் கட்டாய இந்தியும் ஒழிந்துபோக, தமிழக அரசிய லுலகில் தெளிவும் அமைதியும் அற்ற நிலை ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களெல்லாம் நாட்டையும், அரசியலையும் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் தங்கள் சுயநலப் போக்கைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம், அந்த நேரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் இராமசாமி, அரசியலை வெறுத்துவிட்டுச் சுயமரியாதை இயக்கத்தை வலுவடையச் செய்து, சமுதாயத் துறையில் தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என்ற நீடு சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அரசியலையும் பொருளாதாரத்தையும் அறவே ஒதுக்கி விட்டு, வெறும் சமுதாயக் கொள்கையை மட்டும் மேற் கொள்வதைவிட, அரசியல் - பொருளியல்-சமூகவியல் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு அமைப்பே நாட்டிற்குத்தேவையான நலமெலாம் படக்கும் என்பது அறிஞர் அண்ணாவின் எண்ணமாக இருந்தது. இந்த அடிப்படையில் பணிபுரிவதற் கான சூழ்நிலையை உருவாக்க, அறிஞர் அண்ணா அவர்கள் 1942-60 காஞ்சிபுரத்தில் 'திராவிடர்க் கழகம்' என்ற