34 பெயரில் முசன் முதல் கழகம் ஒன்றை நிறுவினார்கள். அதலையொட்டி ஆங்காங்கு சில கழகங்கள் தோன்றவே, பெரியார் இராமசாமி அவர்களும் அந்த அமைப்பை ஏற்றுக்கொள்ளுகிற அளவுக்குச் சூழ்நிலை உருவாகியது. . பிற 1944-ல் சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநில மாநாட்டில், அதுவரையில் ஜஸ்டிஸ் கட்சியில் புல்லுருளிகளாக இருந்து வந்த பட்டம்-பதவி - பணக்காரத் திமிர்பிடித்தவர்களை வெளியேற்றும் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றிய அப்பொழுதே, பார்ப் பனரல்லாதார் கட்சி' என்பதைத் 'திராவிடர்க் கழகக் என்று மாற்றவேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு லந்து அறிஞர் அண்ணா அவர்கள் நிறைவேற்றினார்கள். பிறகு நாளடைவில் சருத்து மேலும் வளர, 'திராவிடர்க் சூரிய கழகம்' அதாவது 'திராவிடர்க் சழகம்' என்று இனத் தின் அடிப்ப.ை யில் பெயர் அமைவதைவிட, 'திராவிடத் துக்குரிய கழகம்' அதாவது 'திராவிடக் கழகம்' என்று நாட்டின் அடிப்படையில் பெயர் அமைவது சாலச் சிறந்தது என்னும் உணர்வு ஏற்பட்டது. . 1949-ம் ஆண்டில் "திராவிட முன்னேற்றக் கழகத்'தை நிறுவ முற்பட்டபோது, 'திராளீடம் என்ற இடத்திற்குரிய முன்னேற்றக் சுழகம்' என்னும் பொருள்படும்படியாகத் திட்டவட்டமாக அறிஞர் அண்ணா அவர்கள் பெயரிட் டார்கள். அமைப்புக்குக் 'சழகம்' என்ற பெயரை இட்டு அதற்கும் 'திராவிட' என்ற அடைமொழியைக் கொடுத்த பெருமை யும், சிறப்பும் அறிஞர் அண்ணா அவர்களைச் சாரும். மன்றம் நாள் 15-6-54
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
