பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நினைவோடு சென்ற அண்ணா, விஷக்கிருமிகளுக்கு இரை யான உடலின் தோற்றத்தைக் கண்டு கண்கலங்கினார். அழகிரிசாமி, குற்றுயிரும் குறையுயிருமாக இருக்கும் தன்னை வறுமை மிக விரைவிலே கொண்டு போகும் போலிருக்கிறது என்ற கருத்தை இருமல் இடை இடையே வர சில சில சொற்களால் தெரிவித்தார். அண்ணாவால் நீண்ட நேரம் இருந்து அவரது துன்பத்தைப் பார்த்துக் கொண்டிருக்கத் தாள முடியவில்லை. நோய் தீராதமுறை யில் அழகிரிசாமி அன்று இரவே தஞ்சைக்குப் புறப்படு கிறார் என்பதை அறிந்துகொண்ட அண்ணா ஏதேனும் ம் பொருளுதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் விரைந்து வெளியேறினார்கள். அண்ணா அவர்கள் முன்பு 'சந்திரோதயம்' நாடகம் தடத்திய விதத்தில் மிச்ச தொகை சுமார் ரூபாய் எழுநூறு தோழர் டி.சண்முகம் அவர்களிடத்தில் கொடுத்து வைத் திருந்தார். அதை வாங்கித் தோழர் மதியழகன் அவர் களிடம் கொடுத்தார். தோழர் மதியழகன் அதனை வாங்கிக்கொண்டு விரைந்து சென்று, தாம்பரம் நிலையத் தில் புகைவண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த தோழர் அழகிரிசாமியிடம் கொடுத்தார். அந்த ரூபாய் அவரது நோயைப் போக்கத் துணையாக இல்லாவிட்டா லும், அழகிரிசாமிக்குச் சிறிது மனை ஆறுதல் அளிக்கத் துணையாக இருந்தது. மேலும் அண்ணா அவர்கள் அப்பொழுது கூட்டம் ஒன்றுக்கு ரூ.100 தோழர் அழகிரிசாமிக்கு நிதியாக அளித்துவிட்டு இரசீதைக் காட்டினால்தான், கூட்டத் தீற்குத் தாம்வர இயலும் என்று நிபந்தனை போட்டார்கள். அந்த வகையில் சில நூறு ரூபாய்கள் தோழர் அழகிரிசாமிக்கு இறுதி நாட்களில் உதவி செய்தன.