பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழர் அழகிரிசாமி மறைந்த பிறகு, அவர்து குடும்பம் அல்லற்படக் கூடாது என்று அறிஞர் அண்ணா, என்.எஸ்.கே.டி.பி. பொன்னுச்சாமி ஆகியோரின் ' விடா முயற்சியால், நிதியொன்று சேர்க்கப்பட்டுக் கடனில் மூழ்கியிருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுக் குடும்பத்திற்குச் கொடுக்கப்பட்டன. சௌந்திரபாண்டியன் பி.டி. இராசன் ஆகியோரின் உதவியாலும் அழகிரிசாமியின் சொத்துக்கள் சிறிதளவு மீட்கப்பட்டன. நோய் தோழர் அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியின் இறுதி நாட்களில் அவரை வாட்டினாலும், மனம் வாடாதவாறு சிறிதளவு ஆறுதல் அளிக்கும் பொறுப்பை அறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அது அழகிரிசாமிக்குச் சிறிதளவு மகிழ்ச்சியைத் தந்தது. மன்றம், நாள் 1-7-54 தாமரை மூடிக்கொள்வது ஏன்? ஒரு ஆடவனும் அவன் ஆருயிர்க் காதலியும் சரச மாடுவதை வேறோர் பெண் காண நேரிட்டால், வெட்கித் தலை குனிந்து சுண்களை மூடிக்கொள்ள மாட்டாளா? அதேபோலத்தான். சந்திரன் எனும் மணாளன், அல்லிப்பூவாகிய தன் மனையாளுடன் விளையாட ஆரம்பிக்கிறான். சந்திரன் உதித்ததும் அல்லி மலருகிறதல்லவா? காதல் விளையாட்டுத் தானே அது. அல்லியும் சந்திரனும் இப்படிச் சரசமாடுவதைக் கண்டதும் பத்மாவுக்கு வெட்கம். கண்களை மூடிக்கொள்கிறாள். அறிஞர் அண்னா