தெருக்கூத்து வேடிக்கை . தெருக்கூத்து வேடிக்கை பார்ப்பதில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு இளம் வயதிலிருந்தே விருப்பம் நிரம்ப உண்டு. தெருக்கூத்தை ஒரு பொழுது போச்சாகவும், நகைச்சுவை பருகும் வாய்ப்பாகவும் கொள்ளுவது அவர து பபாகும் தெருகூத்து நடிகர்களின் உணர்ச்சிகரமான நடிப்புகளில் ஒன்றி நின்று, நடிப்பின் நயத்தை வியந்து, அகமகிழ்ச்சி கொள்வதிலே அறிஞர் அண்ணா அவர்களுக்கு எப்பொழு தும் ஆவல் உண்டு. அவரின் பள்ளிப் பருவ காலத்தில் காஞ்சியில் எங்கு தெருக்கூத்து நடந்தாலும். அங்கு முதலில் சென்று உட்கார்ந்து, இறுதிவரையில் இமைகொட்டாமல் பார்த் திருந்துவிட்டு, கூட்டம் கலைந்து எல்லோரும் வீடு திரும்பி யதற்குப் பிறகு, கடைசியாக வீடுவந்து சேருவது அவரது வழக்கம். இப்பொழுதும் சுற்றுப்பயணத்தை ஒட்டி வெளியூர் நோக்கிச் சென் கொண்டிருக்கும்போது, எங்கேயேலும் சாலை ஓரத்தில் தெருக்கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தால் தாம் ஏறிவரும் நிவவூர்தி (கார்) வண்டியைத் தொலைவில் நிறுத்திவைத்துவிட்டு, யாரும் அறியாவண்ணம், ஒதுக்கமான இடத்தில் நின்றுகொண்டு காட்சிகளைக் கண்டு களித்துக்கொண்டிருப்பார். அறிஞர் அண்ணா அவர்கள் தங்களது தெருக்கூத்தைக் கண்டு . கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி எப்படியேனும்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
