டாக்டர் இரா. நெடுஞ்செழியன் எம்ஏ., டி. SELL, நிதி அமைச்சர் ரெம் அரசு தலைமைச் செயலாம். செவனை - 600 009. தாள் 7-7-1981 வீழ்ச்சியுற்ற தமிழகத்திற்கு எழுச்சி தந்தவரும், விசை யொடிந்த உள்ளங்களுக்கெல்லாம் வலிமை ஊட்டியவரும், அரண்மனையில் மட்டுமே உலாவிய அழகு தமிழை ஆவ மரத்தடியில் வாழ்கின்ற பாமரமக்களிடத்திலும் பரவும்படி செய்தவரும், பேச்சிலும் எழுததிலும் சொல்லுக்குச் சொல் சுவை ஏற்றியவரும், பொருளுங்குப் பொருள் ஒளி ஊட்டிய வரும், பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் வழி நின்று பகுத்தறிவு நெறியைப் பரப்பியவரும், தமிழ்ப் பெருங்குடி மக்களின் ஈடும் எடுப்புமற்ற ஒரு பெருந்தலை வரும். திராவிட இனத்தின் பாதுகாவலரும், அறிவுத்திறன்- ஆற்றல்திறன்-பணபாட்டுத்திறன் ஆகியவற்றிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்நதவரும் ஆன ள பேரறிஞர் அண்ணா அவர்களோடு இருபத்தைந்து ஆண்டுக்காலம் நெருங்கிப் பழகி, அவருடைய அன்பையும், அரவணைப் பையும் பெற்றவன் நான். அந்த நிலையை எண்ணிடுந் தோறும் எண்ணிடுந்தோறும் இன்பம் பெறுகிறேன். என்னைப் போன்ற எண்ணிறந்தவர்களைத் தம்பிமார் களாகப் பெற்றதில் அறிஞர் அணைா அவர்கள் பெரு மகிழ்வு கொண்டார்கள். அவரை அண்ணனாகப் பெற்றி ருந்ததில் நானும், என்னைப் போன்றவர்களும் பெருமிதம் கொண்டிருந்தோம. அறிஞர் அண்ணா அவர்களுடன் இருப்பதே மகிழ்ச்சி தரும்; அவருடைய அறிவார்ந்த நகைச்சுவை மொழிகளைக்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
