பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில வகுப்பில் அண்ண! அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுது ஆங்கிலத்தில் கட்டுரையெழுதுவதிலும், பேசுவதி இம் சிறந்து விளங்கினார்கள். அவர் கல்லூரி முதல் வகுப்பில் படிக்கும்பொழுதே, . அவருடைய ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து, ஆசிரியர்கள் மற்றமாணவர்களுக்கு வகுப்பில் படித்துக் காட்டுவார்களாம். ஆனால் அவர் ரண்டாவது வகுப்பில் படித்த பொழுது, ஆங்கிலக் கட்டுரை வகுப்பிற்கு வந்த ஆசிரியருக்கு அண்ணா எழுதிய உயர்தர ஆங்கில நடை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. . அண்ணாதுரை! உன்னுடைய கட்டுரையில் நீண்ட வாக்கியங்கள் பல வருகின்றன. கட்டுரையென்றால், சிறு சிறு வாக்கியங்களாக இருக்கவேண்டும்' என்று ஆசிரியர் சொன்னார். "சரி கவனத்தில் வைத்துக் கொள்ளுகிறேன் அண்ணா அந்த வகுப்பில் உட்கார்ந்துவிட்டார். என் அடுத்த ஆங்கிலக் கட்டுரை வகுப்பில், அண்ணா கட்டுரையெழுதி முடித்ததும், ஆசிரியர் அதை படித்தார். வாங்கிப் 'ஒரு காலத்தில் ஒரு கிழவன் இருந்தாள்.அவன் பெயர் ராபர்ட்