41 இப்படிக் கட்டுரை ஆரம்பித்தது. நான் சொன்னதைப் பையன் அப்படியே கடைப்பிடித்து அவருக்குச் சற்று மகிழ்ச்சியைத் தந்தது. மேற்கொண்டு கட்டுரையைப் படித்தார். "அவன் காலையில் எழுந்தான். வெளியில் வந்தான். சந்தையை நோக்கி நடந்தான். சந்தைக்கு வந்தான். அங்கு ஒரு கடையிருந்தது. இப்படி வாக்கியங்களெல்லாம் எழுவாய் பயனிலை வைகளை மட்டும் கொண்டதாய். மிகச் சிறு சிறு வாக்கியங்களாக இருந்தன. வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கேலியைப் புரிந்துகொண்டதும், ஆசிரியர் கட்டுரையை வைத்துவிட்டு, 'இப்படி கட்டுரை முழுவதும் சிறு சிறு வாக்கியங்களாகப் போட்டுவிட்டாயே, ஏன்?* என்று அண்ணாவைக் கேட்டார். நீங்கள் தானே, நீண்ட வாக்கியங்கள் கூடாது; சிறு சிறு வாக்கியங்களாக இருக்கவேண்டுமென்று சொன்னீர்கள்'" என்று அண்ணா பதிலளித்தார். 'அதற்கு ஒரேயடியாக வெறும் சிறு வாக்கியங் களாகவே கட்டுரை முழுவதும் இருக்க வேண்டாம் ஆங்காங்கு சில நீண்ட வாக்கியங்களும் வரலாம்!' என்று ஆசிரியர் சொன்னார். அதிலிருந்து அண்ணாவின் கட்டுரையை அவர் குறை கூறுவது கிடையாது! மன்றம்,நாள் 15-8-54 -3-
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
