பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுப்பிள்ளை பட்ட பாடு கம்பராமாயணம் ஆக்கநெறிக்கு ஆகும் நூலா-ஆகாத நூலா என்பது பற்றிய விவாதங்கள், தமிழ்நாடெங்கணும் தலைதூக்கி நிற்கும் நிலை, 1942-43-44-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது. கம்பராமாயணம் பொன்னேபோல் போற்றப்பட்டுப் புவியுள்ள அளவும் காப்பாற்றப்படவேண்டிய நூலாகும் என்னும் கருத்துப்படத் தோழர்கள் ஆர்.பி.சேதுப் பிள்ளை, பண்டிதமணி கதிரேசச் செட்டியார், ச. சோம சுந்தர பாரதியார், டி.கே.சிதம்பரநாதனார் ஆகியோர் பேசிவந்தனர். கம்பராமாயணம் ஆரிய மக்கள் தேவர்களெனவும், ராமன் முதலியோர் கடவுள்களாக வழிபடவேண்டியவர் களெனவும், அவர்களது செயலே சிறந்த செயலெனவும் தமிழர்களை எண்ணச் செய்ததோடல்லாமல், அதற்கு தூபதீப நைவேத்தியங்காட்டி வந்தனை வழிபாடு செய்தால் போகிற கதிக்கு நல்லகதி ஏற்படும் என்று நம்பச் செய்ததால், அதன் நோக்கத்தையும், விளைவையும் கண்டித்துப் பெரியார் ராமசாமியும், அறிஞர் அண்ணாவும் நாடெங்கும் எடுத்துரைத்து வந்தனர். கம்பராமாணயத்தைப்பற்றி அறிஞர் அண்ணா அவர் தெரியும், சிறந்த தமிழ்ப் புலவரோடு களுக்கு என்ன