43 அவரை விவாதத்துக்கு விட்டால், அவர் உறுதியாகத் தோற்றுப் போய்விடுவார். அப்படித் தோற்றுப் போய் விட்டால் கம்பராமாயண எதிர்ப்புக் கிளர்ச்சி வீழ்ச்சியுற்றுப் போய்விடும் என்று கருதிக்கொண்டு சென்னைச் சட்டக் கல்லூரித் தமிழ் மன்றத்தினர் கம்பராமாயண விவாதக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். கூட்டம் 9-2-1943 செவ்வாயன்று மாலை 4-30 மணிக்குச் 4-30 மணிக்குச் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பேராசிரியர் ஆர்.பி.சேதுப்பிள்ளையோடு விவாதம் நடத்தும்படி அறிஞர் அண்ணா அழைக்கப்பட்டிருந்தார். விவாதக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும்படி இந்து அறநிலையப் பாதுகாப்புக் குழுத் தலைவர் தோழர் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார். கம்பனின் மண்டபம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் ஏராளமாகக் குழுமியிருந்தனர். தலைவர் கூட்டத்தைத் துவக்கி முதலில் அறிஞர் அண்ணா அவர்களைப் பேசு வதற்கு அழைத்தார். அறிஞர் அண்ணா அவர்கள் புலமைத் திறனைத் தாம் மறுக்கவில்லை, கம்பராமாயணத்தின் சொல்லாழம், பொருள் செறிவு உவமை அழகு, அணி அழகு ஆகியவற்றை தாம் வெறுக்க வில்லை என்றும், ஆனால் கம்பராமாயணத்தின் நோக்கத் தையும், விளைவையும் வன்மையாகத் தாம் எதிர்ப்பதாக வும் கூறி சுமார் 11 மணிநேரம் பேசினார்கள். பிறகு பேராசிரியர் ஆர்.பி.சேதுப்பிள்ளை அவர்கள் எழுந்து, அறிஞர் அண்ணாவின் ஆணித்தரமான வாதங் களுக்கு நேருக்கு நேர் விடையிறுக்கமாட்டாமல், பத்து நிமிடநேரம் ஏதோ சில பொருத்தமற்றவைகளைக் கூறி, மற்றோர் முறை இவ்விஷயமாக அண்ணா அவர்கள் அழைப்பின், காஞ்சிபுரம் சென்று இது குறித்துப் பேசுவேன்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
