46 "நான் குறிப்பு எடுக்கவில்லை!' என்று அண்ணா பதிலளித்தார். 'ஏன்?' ? 'அவற்றை உருப்போட்டு அப்படியே ஒப்பிக்க வேண்டாமென்று நான் நினைத்தேன். என்று கர்வம் பிடித்தவன்! உட்கார்!” ய ஆசிரியர் சொல்லி உட்காரவைத்தார். அண்ணாவும் நோட்சுகளை எழுதவில்லை. கடைசியாக பல்கலைக் கழக இண்டர் தேர்வு நடந்து, பரிட்சை முடிவுகள் வெளிவந்ததும், அறிஞர் அண்ணா அவரிகள் ஆங்கிலப் பாடத்தில் முதலாவதாகத் தேறியிருந் தார். அதற்காக அவருக்கு ஒரு பரிசும் வழங்கப்பட்டது பரிசு வழங்கும் விழாவில், பரிசுப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு அறிஞர் அண்ணா அவர்கள் வந்ததும் அவருடைய ஆங்கில ஆசிரியர் எதிர்ப்பட்டு வாழ்த்தினார். நன்றியைத் தெரிவித்துவிட்டு, "சார்! உங்களுடைய நோட்சை நான் உருப்போட்டு ஒப்பித்திருந்தால், பாஸ் செய்திருப்பது நீச்சயம்; ஆனால் இந்தப் பரிசைப் பெற் றிருக்க முடியாது' என்று வேடிக்கையாக, அண்ணா சொன்னார். என்று ஆசிரியர் சிரித்தபடி, "நீ செட்டிக்காரன் எனக்குத் தெரியுமே!" என்று சமாளித்துக் கொண்டார். மன்றம், நாள்: 15-9-54
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
