முதல் நாடக முயற்சி அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித் துக்கொண்டு பொது வாழ்க்கையில் இறங்கிய பிறகும், நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவரது சுற்றறிவில்லார் கையில் சிக்கிப் பிற்போக்குத் தன்மையில் போய்க் கொண்டிருந்த நாடக உலகைக் கற்றறிவாளர் கைக்கு மாற்றி, நாட்டிற்கும் சமுதாயத்திற் கும் அதனால் பலன் ஏற்படும்படி செய்யவேண்டும் என்பது, அறிஞர் அண்ணாவின் ஆவல்,அதற்கான வாய்ப்பும் வசதி யும் அவர்களுக்கு நீண்ட நாட்கள் ஏற்படாமலேயிருந்தன. . . 5 காஞ்சீபுரத்தில் தம் சொந்தமுயற்சியில் "திராவிடநாடு' வார இதழ் தொடங்கி நடத்திக்கொண்டு வரும்போது, அறிஞர் அண்ணாவின் உள்ளத்தில் வேரூன்றி இருந்த கருத்து, செழித்து வளர்ந்து, பூத்துக், காய்த்துக், கனியத் தொடங்கிற்று. விளைவாக அதன் "சந்திரோதயம்' என்னும் நாடசம் உயிர்பெற்று எழுந்தது. அதில் அறிஞர் அண்ணாவும், இயக்கத் தோழர்களும், "திராவிட நாடு * அலுவலகத்தில் பணியாற்றி வந்தோரும் பங்கு ஏற்று நடிப்பது என்னும் முயற்சி உருப்பெற்றது. நாடகம் சரி யாக இருக்குமா இருக்காதா என்ற ஐயப்பாடும், அதனை முதலில் எங்கு நடத்திக் காட்டுவது என்ற அச்சமும்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
