பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அண்ணாவுக்கு ஏற்பட்டன. ஐயப்பாட்டையும், அச்சத் தையும் போக்கிக் கொள்ள, வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவத்திபுரத்தில், அந்த நாடகத்தை நடத்திப் பார்ப்பது என்னும் முடிவில், 1943-ம் ஆண்டில் முதல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.நாடகம் யாவரும் போற்றிப் புகழும் வண்ணம் அமைந்ததோடு, அறிஞர் அண்ணா நடிப்பிலும் மிகச் சிறந்து விளங்குபவர் என்னும் உண்மையும் வெளிப்பட்டது. அண்ணா அவர்கள், ஆண்டி, அப்துல்லா, துரைராஜ், தொழிலாளி, மடாதிபதி, ஜமீன்தார் ஆகிய வேடங்களைத் தாங்கி, மிகத் திறம்பட நடித்து மக்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டார். பிறகு அந்த நாடகம் தமிழ் நாடெங்கும் நடித்துக் காட்டப் பட்டது. "சந்திரோதயம்" நாடக உலகில் ஒரு புரட்சியையும், மறுமலர்ச்சிககயும் உண்டாக்கிற்று என்னலாம். "சந்தி ரோதயம்" நாடகத்தைக் கண்ட பிறகு புதுப்புது சீர் திருத்த நாடகங்கள் தோன்றின; சீர்திருத்த நாடகாசிரியர் களும சீர்திருத்த நடிகர்களும் கிளம்பினர். பெரும்பாலான நாடகக் கம்டெனிகள் புராண நாடகங்களைக் கைவிட்டுச் சீர்திருத்த நாடகங்கவையே நடிததுக்காட்ட ஆரம்பித்தன. இதற்கெல்லாம் காரணம் "சந்திரோயம்" என்றால் அது மிகையாகாது. மன்றம், நாள்: 1-10-54 அகமும் முகமும் முகத்தில் புன்னகையும் அகத்தில் நம்பிக்கை யும், செய்சையில் சுத்தமும், சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மையுமிருந்தால் போது மானது. அறிஞர் அண்ணா