கேட்பது அதைவிட மிகவான மகிழ்ச்சியைத் தரும். அவரோடு சேர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அதை விட மிகவான மகிழ்ச்சியைத் தரும். அவரோடு இணைந்து சீரிய செயல்களில் ஈடுபடுவது அதையும்விட மிகமான மகிழ்ச்சியைத் தரும். . அறிஞர் அண்ணா அவர்களோடு நெருங்கிப்பழகிய காலத்தில் அவரைப்பற்றி நான் கேட்டறிந்த சில சுவையான செய்திகளையும், நானே நேரில் கண்டறிந்த சில சுவையான செய்திகளையம் "மன்றம்" இதழிவு நான் வெளியிட்டு ந்தேன். 194ஆம் ஆண்டிற்கும், 1957ஆம் ஆண்டிற்கும் இடையில் ‘மன்றம் இதழில் வெளியிட்ட கட்டுரைகளைத் தாகுத்துத் தையற்கலை ஆசிரியர் நண்பர் கே.பி சுந்தரம் அவர்கள் நூல்வடிவில் கொண்டு வந்துள்ளார். 'முரசொலி யின் அண்ணா பிறநசநாள் விழா மலரில் எழுதிய கட்டுரை ஒன்றையும். இந்நூலில் இணைத்துள்ளார். நண்பர் கே.பி. சுந்தரம அவர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். அறிஞர் அண்ணா அவர்களோடு நெருங்கிப் பழகிய பர்கள் ஒவ்வொருவரும் இப்படிப் பலப்பல சுவைதரும் செய்திகளைப் பற்றிக் கண்டும் கேட்டும் அறிந்திருந்திருப் பார்கள், அவையெல்லாம் வெளிவருமாயின் வருங்கால இளைஞர்களுக்கு நல்ல சுவையும், பயனும் கிடைக்கப் பெறும். நானே ஒரு சிலவற்றைத்தாள் 'மனறம்' இதழில் குறிப்பிட்டேன்; அதுவும 1957 வரையில் அறிநதவற்றைத் தான் குறிப்பிட்டேன. அறிஞர் அண்ணா அவர்களில் மறைவு வரையில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொத்கால், அவையெலலாமும் கூடத் தனிச் சுவையும், பயனும் அளிக்கும். இந்த நூல் மற்ற நண்பர்களுக்கெல்லாம் தூண்டு கோலாக அமையும் என்ற என் எண்ணமும், இன்றைய இளைஞர்களுக்கும், வருங்கால இளைஞர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் என்ற என் எண்ணமும் வெற்றிபெறு மேயானால், அதுதான் இந்நூலின் வெற்றியாகும்? . இரா.நெடுஞ்செழியன்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
