பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தங்கியிருந்தார்கள். அப்பொழுது பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஆர்வமிக்க மாணவர்கள் அண்ணா அவர்களைச் சூழ்ந்துகொண்டு, இரவு பகல் ஓயாமல் அடுக்கடுக்காகக் கேள்விமேல் கேள்வியாகப் பொழிந்து காண்டேயிருந்தார்கள். அண்ணா அவர்கள் அவற்றிற் செல்லாம் பொறுமையுடன் விளக்கந் தந்தார்கள். நீதிக் கட்சி பணக்காரர் - பட்டம் பதவியாளர் - கொள்கை - . என்ற யற்றோர் - குணக்கேடர்- உலுத்தர் - உல்லாசக்காரர் ஆகியோர் கையில் சிக்குண்டு இருப்பதைச் சுட்டி, அது மக்கள் கைக்கு மாற்றப்பட்டால் மாணவர்களின் ஒத்துழைப்பு இயக்கத்திற்கு நிரம்ப கிடைக்கும் கருத்தை மாணவர்கள் வலியுறுத்திக் கூறினர். மாணவர் கள் தங்கள் படிப்புமுடிந்ததும் இயக்கப் பணியில், இறங்கித் தமக்கு ஒத்துழைப்புத் தந்தால், நீதிக்கட்சியிலுள்ள வீணர் களை விலக்கிவீட்டு, அதனை மக்கள் கட்சியாக ஆக்கிக் காட்டத் தம்மால் இயலும் என்று அண்ணா அவர்கள் கூறி னார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அளித்த ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் மிக்க ஆர்வங் கொண்டு பாடுபடத் தொடங்கினார்கள். அதன்விளைவாக முதல் திராவிட மாணவர் மாநாடு 1944-ல் குடந்தையில் நடைபெற்றது. 1944 மே திங்களில் அண்ணா அவர்கள் தலைமையில் ஈரோட்டில் திராவிட மாணவர் பயிற்சிக்கான முதல் மாநாடு நடைபெற்றது.மாநாடு முடிந்தவுடன் மாணவர் கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சென்று சொற்பொழி வாற்றிக் கொள்கை விளக்கம் செய்யத் தலைப்பட்டனர். பின்னர் 1944 ஆகஸ்டு திங்களில் சேலத்தில் நடை பெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், அறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின் பெயரை 'திராவிடர் கழகம்' என்று மாற்றிய