பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் முதல் முயற்சியும் தோல்வியும் 1942, 1943-b ண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், திராவிட இயக்கக் கருத்துடைய மாணவர்கள் மிகவாசப்புகாதிருந்த நிலை. அப்பொழுது காங்கிரஸ் கருத்துடைய மாணவர்களும், கம்யூனிஸ்டுக் கருத்துடைய மாணவர்களும் பல்வேறு துறை சங்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். மாணவர் தோழர்கள் க.இராமையா ( அன்பழகன் இரெ.தண்ட பாணி (இளம் வழுதி) இரா.நாராயணசாமி (நெடுஞ் செழியன்) மற்றும் முப்பது மாணவர்கள் தாம் நீதிக்கட்சி (திராவிட இயக்க)க் கருத்துக்களில் பற்றுகொண்டு 'திராவிடநாடு' 'குடிஅரசு' இதழ்களை வாங்கிப் படித்துக் கொள்கைகளைப் பரப்பி வந்தனர். 1942-ல் அறிஞர் அண்ணா அவர்களை வரவழைத்துப் பல்சலைக்கழகத்தில் பேச வைக்க வேண்டும் என்று இயக்க மாணவர்கள் ஆர்வங் கொண்டார்கள். அப்பொழுது பல் கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தவர் நீதிக்கட்சிப் பற்றுடையவரான சர் கே.பி. ரெட்டி நாயுடுகாரு ஆவார். தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் தோழர் கா.சுப்பிர மணியப்பிள்ளை எம்.ஏ., எம்.எல், இருவருடைய அனுமதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்பேரில், அறிஞர் அண்ணா