53 அவர்களை வரவழைப்பதற்கான கடிதப் போக்குவரத்து நடத்தப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்களும் வருகை தர இசைந்தார்கன். பின்னர் சர் கே.வி.ரெட்டியிடம் மாணவர்கள் அனுமதி கேட்கப் போயினர். அறிஞர் அண்ணா அவர்களுக்கு இடம் அளித்தால். பார்ப்பனப் பேராசிரியர்களும் பிறரும், தம்மைக் குற்றஞ்சாட்டி விடுவார்களோ என்று அஞ்சிய சர் கே.வி. ரெட்டி நாயுடு காரு அனுமதிதர மறுத்துவிட்டார். தமிழ்ப் பேராசிரியர் சிபார்சின் பேரிலாவது அனுமதி கிடைக்குமா என்று மாணவர்கள் முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. ஏனெனில் அந்தக் காலத்தில்தான் கம்ப ராமாயண எதிர்ப்புக் கிளர்ச்சி நாடெங்கும் ஓங்கிநிற்கிறது பழம் பண்டிதர்களின் கண்டனக் கணைகள் அறிஞர் மீது போகுமிடத்திலெல்லாம் வீசப்படும் நேரம். அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் இருந்த பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும், பிற பழம் பண்டிதர்களும் அறிஞர் அண்ணாவுக்கு எவ்வகை யிலும் அனுமதி அளிக்கக்கூடாது என்று, பேராசிரியர் கா.சுப்பிரமணியப்பிள்ளை அவர்களிடம் வற்புறுத்திக் கூறிவிட்டனர். பேராசிரியர் கா.சு.பிள்ளைக் அண்ணாவை வரவழைப்பதில் வெறுப்புக் கொள்ளவில்லை என்றாலும், சுற்றுச் சூழ்நிலையின் காரணமாக, அனுமதி யளிக்கவோ, உதவியளிக்கவோ மறுத்துவிட்டார். அண்ணாவின் குறிப்பிட்ட நாளில் அண்ணா அவர்கள் சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தில் பேசுவ தற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு எப்படியேனும் கூட்டம் நடத்திவிட வேண்டும் என்ற ஆர்வத்தால் கிளர்ந்தெழுந்த மாணவர்கள் புலவர் நா. மு. மாணிக்கம் அவர்களின் ஒத்துழைப்பின் பேரில், சிதம்பரம் இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
