பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1943 இறுதியில் 56 சிதம்பரத்தில் அண்ணாவின் "சந்திரோதயம்' நடைபெற்றது. அண்ணா துரைராஜாக நடித்தார். நாடகத்தில் வரும் துரைராஜ், கடைசியில் விஷத்தைக் குடித்து இறக்கும் கட்டம் வந்தது. துரைராஜ் விஷக் கோப்பையைக் கையிலெடுத்து அருந்தப் போனான். திடீரென்று "நிறுத்துங்கள்!" என்று கூச்சல் வந்தது. எங்கிருந்து என்று பார்த்தால், நாடக மேடையிலிருந்தல்ல. கீழிருந்து, நாடகத்திற்கு தலைமை வகித்தவர் எழுந்து நின்று அவ்வாறு சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் புரிய வில்லை. நாடகம் அப்படியே தடைபட்டது. துனாராஜ் விஷக் கோப்பையைக் கையில் பிடித்தபடி இருந்தார். தலைமை வகிப்பவர் மேடைமீது ஏறினார். "இது கூடாது அண்ணா அவர்கள் விஷங் குடிப்பது கூடாது, அவர் ஏன் சத்துப்போக வேண்டும்? அவர் இஷ்டப்பட்டால், இது போல ஜமின்தாராக இருக்க முடியாமல், போய்விடாது. அண்ணா விஷங் குடிப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!" என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். மற்றவர்கள் அவரைச் சமாதானப் படுத்தி உட்கார வைத் தார்கள். அந்த அளவு அண்ணாவின் சோகப் பேச்சும் நடிப்பும் அதில் இருந்தது. மன்றம், நால்: 15. 11. 54. நாம் அந்நியர் யார் . சாப்பிடாத உணவுப் பொருளை 'அந்நியப் பதார்த்தம் என்று சொல்கிறோம். அதைப் போலவே தமக்குப் புறம்பானவர்களை அந்நியர்கள் என்று சொல்லுகிறோம். அறிஞர் அண்ணா