பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுமுயற்சி ஆனால் வெற்றி! 1942-ல் சர் கே.வி.ரெட்டி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த காலத்தில், அறிஞர் அண்ணா அவர்களை வரவழைக்க முயற்சி எடுத்து, அந்த முயற்சி தோல்வியுதவே, திராவிட இயக்க மாணவர்கள் வேறொரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தனர். சர் கே.வி. ரெட்டி இயற்கை எய்திய பிறகு தோழர் எம். இரெத்தினசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வந்தார். அப்பொழுது தமிழ்த் துறைப் பேராசிரியராகத் தோழர் கா.சு.பிள்ளை அவர்கள் இருந் தார்கள். தோழர் க.அன்பழகன் தமிழ் இலக்கியக் சுழகத்தின் செயலாளராக இருந்தார். திராவிட இயக்க மாணவர்களின் ஒத்துழைப்பின் பேரில் தோழர் க அன்பழகன் அவர்கள்விடாமுயற்சிசெய்து அறிஞர் அண்ணா அவர்களை வரவழைப்பதற்கான அனுமதியைத் துணை வேந்தரிடம் பெற்றார். அறிஞர் அவர்களின் வருகை அண்ணாமலைப் பல்கனைக் கழகத்தில் மட்டு மல்லாமல்,மாணவ உலகிடையே புதியதொரு வரலாற்றை ஏற்படுத்துவதாகவும், மாணவ இயக்க வளர்ச்சிக்கு ஊட்டம் ஊட்டுவதாகவும் இருந்தது. தமிழ்ப் பேரவை, தமிழ் இலக்கியக் கழகம் ஆகிய இரண்டின் சார்பாகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் -4-