பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்குப் பேராசிரியர் கா.சு.பிள்ளை அவர்கள் தலைமை தாங்கி அறிஞர் அண்ணாவைப் பற்றி அரிய பாராட்டுரை ஒன்று வழங் சினார். மாணவ உள்ளங்களெல்லாம் அடைய முடியாத வொன்றை அடைந்துவிட்டதைப் போல் பெருமித உணர்ச்சி யோடு களிகொள்ள, அறிஞர் அண்ணா அவர்கள் "ஆற்றோரம்" என்னும் பொருள் பற்றி அழகுபட, ஆர்வம் மிக, நகைமிளிர, நயம் சிறக்க, சொல் இனிக்க, பொருள் பொதிய அருவியின் வீழ்ச்சியென அரிய சொற்பொழிவு ஆற்றினார்கள். அறிஞர் அண்ணா அவர்களின் தமிழ்ப் பேச்சின் அருமை யைக் கேட்டறிந்த செவிகள், அதைவிட மேலாக விளங்கிய அவரது ஆங்கிலப் பேச்சின் அருமையையும் கேட்டறியும் வாய்ப்பினையும் பெற்றன. துணைவேந்தர் தோழர் எம். இரெத்தினசாமி அவர்கள் தலைமையில் "பழைய உலகமும் புதிய உலகமும்' (The world Old and New.) என்னும் பொருள் பற்றி அரியதோர் சொற்பொழி வாற்றினார்கள். இந்த இரண்டு பேச்சும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அப்பொழுது படித்துக் கொண் டிருந்த செயல் மாணவர்கள் சிலர்க்கு, அறிஞர் அண்ணா வைச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் கொள்ளும்படி ஊக்கமளித்தன என்றால் மிகையாகாது. அந்தத் தடவை விடுதியில் இரண்டு அண்ணா அவர்கள் விருந்தினர் மூன்று நாட்கள் தொடர்ந்து தங்கினார்கள். அப்பொழுதுதான் தேனடையை மொய்க்கும் தேனீக்கள் போல் அறிஞர் அண்ணாவைச் சுற்றிக்கொண்டு மாணவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதும், அண்ணா அவர்கள் விடையிறுத்ததும், மாணவர்களை மாண நிலைக்குப் பிறகு பொதுப்பணிக்கு அழைத்ததும், மாணவர்கள் இசைந்ததும் ஆகும். மன்றம், நாள்: 1.12-54.