பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரண்மனையில் வாழ்ந்த கட்சி ஆலமரத்தடிக்கு வந்தது 910-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி (தென்னிந்திய நலவுரி மைச்சங்க) மாநாட்டில் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் கட்சியின் தலைவராகவும், அறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். பெரியார் அவர்கள் தலைமையின் கீழ் நீதிக்கட்சி வந்த காலத்திலிருந்தே, அதாவது 1938-லிருந்தே, பெரியார் இராமசாமியும், அறிஞர் அண்ணாவும் அரசியல் ககுத்துக் களோடு பொருளாதார-சமூகச் சீர்திருத்தக் கருத்துக் களையும் நாட்டில் பரப்பலாயினர். சுருங்கக் கூறின் மாளிகையிலே மட்டும் உலாவிவந்த கட்சியை மரத்தடிக்குக் கொண்டுவர விரும்பினர். பொருளாதார-சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பிற்போக்கு வாதி களாய் விளங்கிய நீதிக்கட்சியைச் சார்ந்த சில பழைய பிரபுக்களும், பணக்காரர்களும், பட்டதாரிகளும் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெரியாரிடத்திலிருந்து பிடுங்கிவிடவேண்டும் என்று எண்ணினர் அதற்கான முயற்சிகளையும் செய்தனர்.