பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 60 1944-ம் ஆண்டில் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூட்ட ஏற்பாடு ஆயிற்று. அந்த மாநாட்டில் பெரியார் அவர் களின் தலைமையை மாற்றி, அந்தப் பதவிக்குக் காலஞ் சென்ற சர் ஆர். கே. சண்முகம் அவர்களையாவது அல்லது வேறு எந்தப்பிரபுவையாவது கொண்டுவர சில பிரபுக்களும், பிரபுக்களை அண்டினோரும் ஆதரவு தேடும் படலத்தைத் துவக்கினர். பிரபுக்களின் போக்கு பெரியாருக்குக் கலக்கத் தையும், வேதனையையும் தந்தது. நீதிக்கட்சியை விட்டு விட்டு சுயமரியாதை இயக்கத்திலேயே தம் கவனத்தைச் செலுத்தலாமா என்றுகூட பெரியார் அவர்கள் எண்ணி னார்கள். அந்த நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள், "நீதிக்கட்சியிலிருந்து பதவி வேட்டைக்காரர்களை நாம் நாம் நீதிக்கட்சியைவிட்டு விரட்ட வேண்டுமேயொழிய விலகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். அரண்மனையிலிருந்த கட்சியை ஆலமரத்தடிக்குக் கொண்டு வரவே அறிஞர் அண்ணா அவர்கள் அரும்பாடுபட்டார்கள்; அதற்கான முறையில் முயன்றார்கள். 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்' என்ற கட்சியின் பெயரை . திராவிடக்கழகம்' என்று மாற்றியமைக்கும் தீர்மானத்தையும், அரசாங்கம் தந்துள்ள கவுரவப் பட்டங் களையும், பதவிகளையும், கழக உறுப்பினர்கள் துறந்துவிட வேண்டும் என்றும், அப்படித் துறக்க வில்லையானால் அத் தகையோர் கழக உறுப்பினர்கள் ஆகமாட்டார்கள் என்றும் கருத்தமைந்த தீர்மானத்தையும் 1944-ம் ஆண்டில் சேலத்தில் நடந்து நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில், அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி னார்கள். பட்டம்-பதவி வேட்டைக்காரர்கள் கட்சியை விட்டு ஓடினர்; கட்சி பட்டாளி மக்களின் கைக்கு வந்து சேர்ந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் குறிக்கோள் வெற்றிகரமாக ஈடேறியது. மன்றம், நாள்:15.12.54.