பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலை நறுக்கும் கத்திரிக்கோல் 1948- ஆம் ஆண்டில் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் ஒன்று, சென்னை பெரம்பூர் புகை வண்டி நிலையத்திற்கு எதிரிலுள்ளமைதானத்தில் கூட்டப்பட்டது. அந்த விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அன்று பகற்பொழுதில் தோழர் க.அன்பழகன் அவர்கள் வீட்டில் தங்கியிருந் தார்கள். ஓய்வான நேரத்தில் 'சேப்டி ரேசர்' மூலம் முகச் சவரம் செய்து கொண்டார்கள். மீசையைச் செம்மைப் படுத்த வேண்டி தோழர் அன்பழகனிடம் கத்திரிக்கோல் ஒன்று கேட்டார்கள். தோழர் அன்பழகன் அவர்கள் பெரியதொரு கத்தரிக்கோலைக் கொண்டு வந்து கொடுத் கத்திரிக்கோல் தார். அந்தக் மீசையைச் செம்மைப் படுத்துவதற்குப் பதிலாகச் சீர்குலைத்துவிட்டது. இறுதியில் மீசை முழுவதுமே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எப்பொழுதும் மீசையோடு காட்சியளித்துவந்த அண்ணா அவர்கள் அன்று பொதுக் கூட்டத்தில் மீசையில்லாமல் காட்சியளிக்க வேண்டியிருந்தது. அந்த நேரம் அறிஞர் அண்ணா அவர்கள் இயக்க நடவடிக்கைகளில் மிகவாகத் தொடர்பு கொள்ளாமல் ஒதுங்கியிருந்த நேரமாகும். தாம் மீசையில்லாமலிருப் பதைத் தமது அரசியல் போக்கோடு சிலர் தொடர்பு