பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் பாட பேதம் சந்திரமோகன்' நாடகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சுாகபட்டர் வேடந்தாங்கி, அப்பகுதியைச் சிறப் புற ஆக்கினார். காகபட்டருக்குப் பிரதம சீடனாக ரங்கு என்பவன் வருவான். அதில் திரௌபதியைப் பற்றிய உரை யாடல் காகபட்டருக்கும் ரங்குவிற்கும் நடைபெறும். திரெளபதிக்கு ஐந்து கணவன்மார்கள். ஒரே சமயத்தில் தருமர் சொக்கட்டான் ஆடவும், பீமன்சாப்பாடு போடவும் அருச்சுனன் உலாவப் போகவும், சகாதேவன் தருமநூல் படிக்கவும், நகுலன் குதிரைச்சவாரி செய்யவும் கூப்பிட்டால் அவள் என்ன செய்வாள்? என்று காகபட்டர் ஒரு கேள்வி கேட்பார். "என்ன செய்ய முடியும்? ரொம்பச் சங்கடந்தான்' என்பான் ரங்கு. நினைப்பதற்கே இவ்வளவு சங்கடம் என்கிறாயே, இதைப்போல எவ்வளவு சங்கடங்களை அந்தப் பதி விரதை. தாங்கியிருப்பாள்!" என்பார் காகபட்டர். 'என்ன செய்தாள்,ஸ்வாமி?" என்று கேட்பான் ரங்கு. நினை "திரௌபதி உடனே கிருஷ்ணபரமாத்மாவை துக்கொண்டாள். அப்பொழுது கிருஷ்ணபரமாத்மாருக்மணி யுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து சல்லாபித்துக் கொண்டிருந் தார். கிருஷ்ணபரமாத்மா யாருடன் இருந்தார்?" என்று சீடனைக் காகபட்டர் கேட்பார்.