64 'ருக்மணியுடன் !" என்று ரங்கு சொல்ல வேண்டும். ஆனால் ஒருநாள் 'சந்திரமோகன்' நாடகத்தில் இந்தக் கட்டம் வந்த பொழுது, "கிருஷ்ணபரமாத்மா யாருடன் இருந்தார்?' என்று காசுபட்டர் கேட்டபொழுது, 'ருக்மணியுடன்!'" என்று சொல்வதற்குப் பதில் ரங்கு வேடம் போட்டவர் "திரௌபதியுடன்" என்று தவறிச் சொல்லிவிட்டார். மிகத்தவறான பதில்! நாடகமேடையில், பக்கத்தில் இருப்பவர்களுக்கு ரங்கு சொன்ன பதில் தவறானது, பாடத்தில் இல்லாதது என்று தெரியும்! காக பட்டர் வேடத்தில் வேறு யாரும் இல்லாதிருந்தால் திகைத்துப் போவிருப்பார்கள். ஆனால் அறிஞர் அண்ணா சமாளித்துக்கொண்டு "ஏண்டா, மண்டு! ராதா, ருக்மணி சத்தியபாமா, ஆயிரம் கோபிகைகள் இவ்வளவு பேரும் இருப்பது கிருஷ்ணபரமாத்மாவுக்குப் போதாதென்று, . திரௌபதியையும் அவருடன் அனுப்பி வைத்துவிட்டாயா என்று சொன்னார். கைதட்டலில் கொட்டகை அதிர்ந்தது, ரங்குவேடத்தில் இருந்தவன் பெருமூச்சுவிட்டான், "தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன், நான் மண்டு, ஸ்வாமி! என்று நிலை மையைச் சமாளிப்பதற்காக அண்ணா அவர்கள் சேர்த்துக் கொண்ட இந்த பதில் 'பின்பு பாடமாகவே நாடகத்தில் சேர்ந்துவிட்டது. நாடகத்தில் பவருக்கு பாடங்கள் தவறிப் போய்விடுவ துண்டு. அண்ணா அவர்கள் அவற்றைத் தெரிந்து, ஏதாவது கேள்வி - பதில் 268 சமாளித்துக் கொண்டு விடுவது வழக்கம். மன்றம்,15-2-E8.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
