66 கருகில் தவிளிவைத்துக்கொண்டு, உள்ளே இருந்தபடியே நீண்ட குவளையிலிருக்கும் பாலை அந்தக் கிண்ணத்தில் ஊற்றுவார்கள். தாய்ப்பூனை முதலில் குட்டிகளைச் சாப்பிடவிட்டு விட்டுத் தான் காத்துக் கொண்டிருக்கும். அந்தக் குட்டி களில் ஒன்று பருத்து வலிவுள்ளதாகவும், மற்றொன்று மெலிந்து வலிவற்றதாகவும் இருந்தன. வலிவுள்ள குட்டி வவிவற்ற குட்டியை அப்பால் தள்ளிவிட்டுத்தானே பாலை யெல்லாம் குடிக்க முயலும். அப்பொழுது தாய்ப்பூனை வலிவுள்ள குட்டியை அப்பால் தள்ளிவிட்டு வலிவற்ற குட்டி சாப்பிடுவதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கும். குட்டிகள் இரண்டும் சாப்பிட்டு முடிந்ததற்குப் பிறகுதான் தாய்ப் பூனை குடிக்க முயலும். பால் மிச்சம் இருந்தால் குடிக்கும்; இல்லையானால் குட்டிகளை அழைத்துக் கொண்டு போய் விடும். இந்தக் சாட்சி அறிஞர் அண்ணாவுக்கு வியப்பையும் பொழுது போக்கையும் தரும். பிறகு இரண்டு கிண்ணங்களில் இரண்டு குட்டிகளுக்கும் தனித்தனியே கண்ணா அவர்கள் வைத்தார்கள். பருத்த குட்டி தனக்கு வைதத பாலை அவசரமாகக் குடித்துவிட்டு, மெலிந்த குட்டிக்கு வைதத பாலை குடிக்க முயலும். அப் பொழுது அண்ணா அவர்களும் தாய்ப்பூனையும் பருத்த குட்டியை அப்பால் அனுப்பி விட்டு மெலிந்த குட்டி குடிப் பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்கள். பிறகு தாய்ப்பூனை வெளியே படுத்திருக்கக் குட்டிகள் இரண்டும் உள்ளே வந்து விளையாடும். இரவில் நீண்ட நேரம தூக்கம் வராத அண்ணா அவர்களுக்கு இது பொழுதுபோக்காக இருக்கும். ה கடைசி சில் நாட்களில் மெலிந்த பூனைக்குட்டி வராமல் தாய்ப்பூனையும் பருத்த சூட்டியும் மட்டுமே வந்தன. இரண்டு மூன்று நாட்கள் கழித்து கேட்டறிந்த
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
