பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 போது அந்தப் பூனைக்குட்டியை யாரோ அடித்து இறந்து போய்விட்டது என்று தெரியவந்தது. அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அறிஞர் அண்ணா அவர்கள் எதையோ பறி கொடுத்துவிட்டது போன்ற இரக்கவுணர்வோடு இரண்டு மூன்று நாட்கள் காணப்பட்டார்கள். மன்றம், 1.3.55. நல்ல பயன் தரும் நாற்றங்கால் எனக்கு குழந்தைகளைப் பார்க்கும்போது எதிர் காலத்தையே பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவது உண்டு! நமது வாழ்க்கையிலுள்ள துன்ப துயரங்களும், நலிவும் மெலிவும் நீக்கப்பட்ட எதிர்காலத்தை அந்தக் குழந்தைகளின் உருவில் காண்கிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் நுழையும் பிள்ளைகள் கல்வி கற்று மருத்துவர்களாகவும், மாறி வாழ்வில் ஏற்றம் வழக்கறிஞர்களாகவும் பெறவேண்டும்! அந்தப் பிள்ளைகளின் மூலம்தான் நமது நாட்டிலுள்ள இருள் நீக்கப்படும்! கஷ்ட நஷ்டங்கள் துடைக்கப்படும்! வயலுக்கு நாற்றங் காலில் பயிரை வளர்ப்பார்கள். அதுபோல் எதிர் கால வயலுக்கு ஏற்ற நாற்றங்கால் பயிராகப் பிள்ளைகள் இருக்கிறார்கள். நாற்றங்கால் பயீர், பார்ப்பதற்குப் பச்சைப் பசேல் என்று பசுமையாக இருப்பது மட்டுமல்ல; அதை நன்றாக வளர்த்து விரிவான வயலில், முறையாக நட்டு, ஒழுங்காக வளர்த்தால், தரமான பயன் கிடைக்கும. அது போல் பள்ளிப் பிள்ளைகள் எனும் நாற்றங்கால்- பயிராக - நன்றாக - ஒழுங்காக வளர்ந்து வரும் ஆசிரியர்கள் இந்த நாட்டின் பாராட்டுக்குரிய வர்கள், அறிஞர் அண்ணா