பேச முடியாமற்போன ஒரே கூட்டம் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடக் கழகம் ஆகிய அமைப்புகள் தோன்று வதற்கு முன்னால், நீதிக்கட்சியில் சார்ந்திருந்து, பகுத்தறிவு இயக்கக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அவலூர்பேட்டைக்கு ஒருமுறை அழைக்கப்பட் டிருந்தார்கள், அவலூர்ப்பேட்டை வதீகப் பெரியவர்கள், பணக் காரர்கள் ஆகியோரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்த காலம் அது. பகுத்தறிவியக்கக் கொள்கைகளிலே பற்றுக் கொண்ட ஒரு சில இளைஞர்கள் அறிஞர் அண்ணா அவர் களை வரவழைத்து அவ்வூரில் எப்படியேனும் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று முயன்று அரும் பாடுபட்டுக் கூட்டினார்கள். அறிஞர் அண்ணாவும் இசைந் தார்கள். அவலூர்ப்பேட்டையில் மணியக்காரராய் இருந்த பெரி யவர் ஒருவர் தம்மைப் பொருட்படுத்தாமல் 'பொடியர்கள் பொ துக்கூட்டம் கூடுகிறார்களே என்பதைக் கண்டு சினங் கொண்டு, எப்படியேனும் கூட்டத்தை நடத்துவொட் டாமல் செய்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தாள். பொதுக்கூட்டம் ஆரம்பமாகி அறிஞர் அண்ணா அவர்கள் எழுந்திருக்கும்போது அந்தமணியக்காரர் கூட்டத் .
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/69
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
