பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 திடை வந்து நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு அவர் முன்னரே ஏற்பாடு செய்து வைத்திருந்தபடி பறை படிப்போரைப் பார்த்து, "தப்பட்டையை அடியுங்கடா..." என்று கட்டளை பிறப்பித்தார். அவ்வளவுதான் கூடியிருந் தோர் காது செவிடுபடும்படியாகப் பறையடிப்போர் பறை யொலி கிளப்பினர். அறிஞர் அண்ணாவால் ஏதும் பேச முடியவில்லை. "நான் சிறிது நேரத்தில் முடித்துக்கொள் கிறேன். அதைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்கள்!" என்று அண்ணா அவர்கள் அந்த மணியக்காரரை கேட்டுக் கொண்டார்கள் "அதெல்லாம் முடியாது! அடியுங்கடா..." என்று மணியக்காரர் மேலும் கடுமையாகக் கட்டளை யிட்டார். 'அதிக நேரம் பேசப்போவதில்லை, சிறிது நேரந்தான்" என்றார் மீண்டும் அண்ணா அவர்கள். "யாரைக் கேட்டுக்கொண்டு பேசவந்தாய்? என்ளையா கேட்டுக் கொண்டு வந்தாய்? இல்லையே?" என்றார் மணி யக்காரர். போகச் சொல்லுவது "பொதுமக்கள் கூடிவிட்டார்கள். இவர்களை எழுந்து உங்கள் ஊருக்கு நல்லதல்ல. இப் பொழுதுதான் கேட்கிறேன், பேசவிடுங்கள் "என்று அண்ணா அவர்கள் கேட்டார்கள். "அப்படியானால் ஐந்து நிமிடம் பேசு" என்று அவர் அனுமதி தந்தார். அவரது கட்டளையின்பேரில் தப்பட்டை ஒலி நின்றது. அண்ணா அவர்கள் பேச்சைத் தொடங்கி பேசிக்கொண்டேயிருந்தார்கள். ஐந்து நிமிடங்கள் ஆன பறையொலி எழுப்பும்படி வுடனேயே மணியக்காரர் கட்டளையிட்டுவிட்டார். பறைகள் பெரும் ஓசை கிளப்பின. அண்ணா அவர்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் மணியக்காரர் கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லை.