50 மணியக்காரரை எதிர்த்துப் பேசும் ஆற்றல் அப்பொழுது யாருக்கும் ஏற்படாததால், எல்லோரும் வாளா இருந்து விட்டனர். கூட்டம் கட்டிய இளைஞர்கள் அப்பொழுது அண்ணா அவர்கள் எதிரில் வர அஞ்சி மறைந்துவிட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் பேசமுடியாமல் இறங்கிய ஒரே மேடை அதுதான். மறுநாள் காலையில் சிற்றுண்டி அருந்த ஒரு உணவு டுதிக்கு அருகில் அண்ணா அவர்கள் சென்றபோது, அங்கிருந்த மணியக்காரர் அண்ணாவை வரவேற்றுச் சிற்றுண்டி முதலியவைகளை வாங்கி வழங்கினாராம். முதல் நாள் இரவுக் கூட்டம் ஏன் தன்னால் நிறுத்தப் பட்டது என்பதற்கான காரணத்தை அவர் சொல்லும் போது, கூட்டத்தை நடத்தவிட்டால். இளைஞர்கள், எப்பொழுதும் தம்மை மதிக்காமல் போய்விடுவார்கள் என்றும், அவர்களுக்கு அத்து இருக்கவேண்டும் என்பதற்குத் தான் கூட்டத்தைத் தாம் நிறுத்தினதாகவும் கூறினாராம். மன்றம், நாள்: 15-3-55. தகுதியுள்ள தமிழ் ஆங்கிலம் எந்தெந்தக் காரியங்களுக்குப் பயன் படுத்தப்படுகிறதோ அந்த அந்தக் காரியங் களுக்கு இந்தியா வில் உள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்றால் அது 'தமிழ்,தமிழ்' என்று சொல்லத் தயக்கப்பட மாட்டேன். அவ் வளவு வளம் உள்ள மொழி. அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/71
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
