பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிந்து கொள்ளாத அறிமுகம் தோழர் டி.சண்முகம் அவர்கள் செங்கற்பட்டு மாவட் டாண்மைக் கழகத் தலைவராக இருக்கும்போது, அறிஞர் அண்ணா அவர்கள், அவரோடு காரில் செங்கற்பட்டு மாவட் டத்தைச் சேர்ந்த சிற்றூர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புஒன்று ஏற்பட்டது. இது நடைபெற்றது ஏறத்தாழ 1944- ஆம் ஆண்டாக இருக்கக்கூடும். தோழர் டி.சண்முகம் அவர்கள் காரில் சென்று கொண் டிருக்கும்போது இடையில், ஒரு சிற்றூரில், மாவட்டாண் 'மைக் கழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஒன்றைக் கண் டாராம். அதனைப் பார்வையிடலாம் என்று கருதிக் காரை நிறுத்திவிட்டு, அறிஞர் அண்ணாவையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தில் நுழைந்தாராம். அந்தப் பள்ளிக்கூடத்துத் தலைமையாசிரியர் அரசியல் அறிவும் பொது அறிவும் அற்ற ஒருவராக இருந்ததால் அண்ணாவை அவரால் கண்டுகொள்ள தோழர் முடியவில்லை. டி.சண்முகம் தலைமையாசிரியரிடம் பள்ளிக்கூடத்து நிலை மைகளைப்பற்றிச் சிறிதுநேரம் கேட்டறிந்துவிட்டு, அறிஞர் அண்ணாவைச் சுட்டிக்காட்டி "இவர் யார் தெரியுமா?' என்று தலைமையாசிரியரைக் கேட்டாராம். "யார் என்று தெரியவில்லையே!" என்று தயக்கத்தோடு தலைமையாசிரியர் கூறினாராம்.