பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இவரைத் தெரியாது? என்னய்யா நீ தலைமையர் சிரியர்!" என்றாராம் தோழர் சண்முகம். "எங்கேனும் பார்த்திருப்பேன், சரியாக நினைவு ல்லை!" என்று கூறினாராம் தலைமையாசிரியர். இவர் தெரியாது! இவர்தானய்யா அண்ணாதுரை! ண்ணாதுரை என்று தோழர் டி. சண்முகம் சொல்ல, அப்பொழுதும் அண்ணாவை யாரென்று அந்தத் தலைமை யாசிரியரால் புரிந்துகொள்ள முடியவில்லை. "இவர்தானய்யா அண்ணாதுரை! சந்திரோதயம்! நாடகம்? தெரியாது? என்று தோழர் சண்முகம் மீண்டும் கேட்டாராம். . என்று 'ஓகோ! நாடகக் காண்ட்ராக்ட்காரரா...? இழுத்தாற்போல் கூறினாராம் தலைமையாசிரியர். "இல்லையா!சந்திரோதயம்! துரைராஜ் வேஷம்... தடிக்கல்லே என்று கேட்டாராம். "ஓகோ! நடிகரா?..." என்று புரிந்துகொண்டவர் போல தெளிவுபடுத்திக் கொண்டாராம் தலைமையாசிரியர், என்னய்யா இது!... இவரைத் தெரியாது? விடுதலைப் பத்திரிகை! எழுதுவாரு!... பேசுவாரு!... அண்ணாதுரைம் தெரியாது?..." என்று மேலும் விடாமல் வினாவினாராம். தலைமையாசிரியர் தாம் புரிந்துகொள்ளாததை இனியும் காட்டிக் கொள்ளக்கூடாது என்று கருதி, "ஓகோ! இப்பொழுது தெரியுது தெரியுது! பார்த்திருக்கிறேன்! ! பொழுதான் நினைவுக்கு வருகிறது!" என்று கூறினா ராம். உள்ளபடியே அப்பொழுதும் அவர் புரிந்துகொள்ள வில்லையாம். இந்த உரையாடல்களுக்கிடையே அறிஞர் அண்ணா அவர்கள் நின்று கொண்டு என்ன செய்வதென்று தோன்றா மல் தத்தளித்தாராம். அந்த இடத்தைவிட்டு அகன்றால் போதும் என்றாகிவிட்டதாம்! மன்றம், நாள்: 1-4-55. 4