வெறுங்காவலில் போடக் கடுங்காவலில் புகுந்தார் 1938-ஆம் ஆண்டில், ஆச்சாரியாரின் கட்டாய இந்தி நுழைப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்டபோது, அறிஞர் அண்ணா அவர்கள் அதில் ஈடுபட்டு சட்ட என்று வரம்புக்கு மீறிய சொற்பொழிவாற்றினார் ஆச்சாரியார் ஆட்சியால் குற்றஞ்சாட்டப்பட்டு, நான்கு திங்கள்கள் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். அவர் சென்னைப் பெருஞ்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஆன செயல் அறிஞர் அண்ணா அவர்கள் சிறைபுகுமுன்னரே இந்தி எதிர்ப்புத் தொண்டர்களும், தலைவர்களும் பலராகச் சிறை புகுந்தனர். நண்பர்கள் பலர் இருந்த போதிலும், உண்ணு வதும், உறங்குவதும், உரையாடுவதும் களிலேயே பொழுதெல்லாம் கழிவது அண்ணாவுக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. எனவே இரண்டாம் வகுப்பு வெறுங்காவல் தண்டனையைக் கடுங்காவல் தண்டனையாக மாற்றிக் கொள்வதன்மூலம் ஊக்கமும், மனக்கிளர்ச்சியும் பெறலாம் என்று கருதித் தமக்குக் கடுங்காவல் தண்டனை கொடுக்கும்படி உரிய அதிகாரிகளை அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டார். அதிகாரிகளும் அவ்வாறே சில நாட்கள் கழித்து அளித்தனர். -5-
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/74
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
