சாமியார் ‘ஆசாமி'யார் ஆனார்! திராவிடநாடு" அலுவலகப் பொறுப்பாளராக இருந்துவரும் தோழர் ஈழத்து அடிகள் ஒரு ஸ்ரீலஸ்ரீ ஈழத்து சிவானந்த அடிகளாக விளங்கினார். காலத்தில் கையிலே கமண்டலம், உடலிலே சுரவி உடை, சுழுத்திலே உருத்திராக்கக் கொட்டை, நெற்றியிலே 5 • திருநீற்றுப்பட்டை, காலிலே கட்டை, தலையோ மொட்டை இந்தத் தவத்திருக் கோலத்தோடுதான் அவர் 1938 ஆம் ஆண்டிற்கு முன்னால் காட்சியளித்தார். ஈழநாட்டிலே பிறந்து, சிறுவயதிலேயே 'தவத்திருக்கோலம் பூண்டு 'ஸ்தலயாத்திரைகள்' பலசென்று, இறுதியாகக் கருவூரில் 'அறிவுதயக் கழகம்' என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திக் கொண்டு, சிவபூசை சக்திபூசை'களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தமிழிEடத்தே ஆழ்ந்தபற்றும் அதன் வளர்ச்சியிலே அக்கரையும் கொண்டு விளங்கினார். தோழர் இராசகோபாலாச்சாரியார் 1938-வ் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன் என்று அறிக்கைவிட்டபோது, அதனை எதிர்த்து ஆச்சாரியாருக்கு முதல் தந்தி அடித்தவர் ஈழத்துச் சிவானந்த அடிகளே யாவார். இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அவர்தான் துவக்கினார். பிறகுதான் நாவலர் பாரதியார், பெரியார் இராமசாமி அறிஞர் அண்ணா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். ஈழத்துச் சிவானந்த அடிகள் இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரியாகப் பணியாற்றிச் சிறை புகுந்தார் .
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/76
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
