பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஈழத்து அடிகள் காவியுடைத் தோற்றத்தோடு சிறை புகுந்திருந்தகாலை, அறிஞர் அண்ணா அவர்களும் சென்னையில் சிறைபுகுந்தார்கள். இருவரும் 'பி' வகுப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இருவரும் ஒருவரையொருவர் காணவும், ஒருவரோடொருவர் அளவளாவவும், ஒருவருக் கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் மிக்க வாய்ப்பும், பொழுதும் ஏற்பட்டன. அறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் ஈழத்து அடிகளைக் கவர்ந்தன. 'பக்திச் சாமியார்' பகுத்தறிவுச் சாமியாரா'கச் சிறிது சிறிதாக மாறத் தொடங்கினார். 'அடிகளாரின் உள்ளத்தை நன்கு அறியும் வாய்ப்பினைப் பெற்ற அறிஞர் அண்ணா அவர்கள், அடிகளாரின் உள்ளம் மண்ணாசை பொன்னாசை எதையும் எப்பொழுதும் விட்ட தில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். 'அடி களாரின் பொய்மை வாழ்க்கைனகப் பற்றி அண்ணா அவர்கள் அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்யும் போதெல்லாம் "நான் மட்டும் இப்படியலல; இந்த உடையில் இருக்கும் எல்லாச் சாமியார்களும் இப்படித்தான; இதற்கு விதிவிலக்கு அரிதிலும் அரிது" என்று ஈழத்து அடிகள் சப்புவாராம். கோணல் வாழ்சகைரைவிட்டு, நேரான வாழ்க்கைக்கு நேர்முகமாக உள்ளன்போடு வரச்சொல்லி அண்ணா அவர்கள் அடிகளாரைச் சிறையில் வற்புறுத்து வார்களாம்.- - பெண்ணாசை . ஈழத்துச் சிவானந்த அடிகள் வெளியில் வந்த பிறகும் சிலநாட்கள் காவியுடையோடு காட்சி அளிக்க, அறிஞர் அண்ணா அவர்கள் "உள்ளத்திலே ஆசை அவ்வளவும் இருக்க. காவியுடையேன்? திருநீற்றுப் பட்டையேன்?" என்று கேலி செய்ய, ஸ்ரீலஸ்ரீ ஈழத்துச் சிவானந்த அடிகள் பொய்மை வாழ்க்கையைவிட்டு, உண்மையான நேர்மை யான வாழ்ககையில் புகுந்து, தூய வௌளையுடைக்கோலம் பூண்டு தோழா ஈழத்து அடிகளாக மாறினார். அணணா வின் அறிவுரை 'சாமி'யாரை 'சாமி'யாரை 'ஆசாமி'யாராக ஆக்கிற்று! சிறையில் ஏற்பட்ட பலன்களில் இதுவும் ஒன்று? மன்றம், நாவி 1- 5-55