பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவற்கூடத்தில் கடமையுணர்ச்சி மும்முனைப் போராட்டக் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள், செனைனக் காவற்கூடத்தில் தள்ளப் பட்டிருந்தபோது, சுமார் 500-க்கு மேற்பட்ட கழகத் தோழர்களும் அதில் புகும்படி நேரிட்டது. அறிஞர் அண்ணா அவர்களும் மற்றும் சிலரும் 'பி' வகுப்பில் அரசியலாரால் வைக்கப்பட்டிருந்தனர். மற்றைய எல்லோரும் சி வகுப்பில் வைக்கப்பட் தோழர்கள் டிருந்தனர். சிறைபுகுந்த கழகத் தோழர்கள், சிறைக்கூடத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடமையும், கட்டுப்பாடும் தவறாமல் நடந்து கொள்ளவேண்டும் என்பதை வற்புறுத்தி அதனைக் காத்து வருவதிலே அறிஞர் அண்ணா அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துவந்தார்கள். சிறைக்கூடத் தில் சிலபல மாற்றங்கள் தேவை என்றால், அவற்றை அரசாங்கத்திடம் பெற முயலவேண்டுமேயொழிய, சிறை அதிகாரிகளோடு மோதிக் கொள்வதில் பலனில்லை பதை நன்கு வற்புறுத்தினார்கள். என் உணர்ந்தே அண்ணா அவர்கள் கடமையை ஒருபொழுது, சிறைக்குள் ஒரு குழுவாக நுழைந்த சுமார் 30 கழகத் தோழர்கள். குழுவாக காலையில் வரிசையில் உட்காரவும், அறைக்குளளிருக்கும் சிறுநீர்ப் பானைகளை வெளிக்கொண்டுவரவும், சோற்றினைச் சென்று வாங்கிக்