78 கொள்ளவும், மறுத்துவிட்டனர். சிறை வார்டர்களுக்கும். அந்தத் தோழர்களுக்கும் தகராறுகள் வளர்ந்தன. இச் செய்தி அறிஞர் அண்ணா அவர்கள் காதுக்கு மாலை 4 மணி அளவிற்கு எட்டிற்று உடனே அண்ணா அவர்கள் தோழர் நெடுஞ்செழியனை அவர்களிடம் அனுப்பி, கழகத் தோழர் கள் தங்கள் தங்கள் சிறுநீர்ப்பானைகளை வெளியே எடுத்து வைக்கமுடியாது என்றால், நாள்தோறும் தாம் வந்து ல்லோருடைய சிறுநீர்ப்பானைகளை எடுத்துவைக்கவும். தட்டுகளிலே சோறு வாங்கிக்கொண்டு வந்து வந்து அவரவர் அறைகளிலே வைக்கவும் தயாராக இருப்பதாகச் சொல்லச் சொல்லி, அவர்களது அனுமதி பெற்றுவரும்படிக்கூறினார். அப்படியே தோழர் நெடுஞ்செழியன் போய்ச் சொல்ல, தோழர்கள் கண்கலங்கி, தம் செய்கைக்கு வருந்தி, அண்ணா வரவேண்டாம்; நாங்களே முறைப்படி நடந்து கொள்கிறோம. எங்களை மன்னிக்குமபடி அண்ணாவிடம் கூறுங்கள்" என்று விடை சொல்லி அனுப்பினர். அறிஞர் அண்ணா அவர்கள் கடமையுணர்ச்சியையும் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மிக வற்புறுத்தி வந்ததன் காரணமாகத்தான பொதுவாக எல்லாச் சிறை களிலும், குறிப்பாகச் சென்னைச் சிறையில, சிறையதிகாரி கள் பாராட்டத்தக்க வகையில் கழகத் தோழர்களின் நிலைமை இருந்தது. சிறையிலே பிற அரசியல் கட்சிக் காரர்கள் நடந்துகொண்ட விதத்தையும், திராவிட முன்னேற்றக்கழகத தோழர்கள் நடந்து கொண்ட விதத்தை யும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிறை அதிகாரிகள், கழகத் தோழர்களைப் பாராட்டவேண்டிய நிலைமைக்கு உள்ளா னார்கள். மன்றம். நாள் 15-5-55
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
