யாருக்கு ஊசி? அவர்களுக்குப் அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பொழுதுபோக்கு வதற்குரிய பற்றுக் கோடுகளில் மிகச்சிறந்த பற்றுககோடு காஞ்சித் தோழர் சி.வி. இராசக்காபால் ஆவார். அறிஞர் அண்ணா அவர்களும் தோழர் சி. வி. இராச கோபால் அவர்களும் மிகச் சிறிய வயதிலிருந்தே இணை பிரியா நண்பர்கள். பள்ளிப்பருவ காலத்திலும இருவரும் ஒன்றாகவே சேர்ந்து பள்ளிக்குச் செல்வதும், ஒன்றாகவே திரும்பிவருவதும் ஆன பழக்கம் பூண்டிருந்தனர். தோழர் சி வி. இராசகோபால் அவர்களின் பேச்சு, போக்கு, நடவடிக்கைகள் எல்லாம் அண்ணா அவர்களுக்கு எப் பொழுதும் நகைச்சுவை பயப்பனவாகும். அத்தகைய நகைச்சுவையினால் ஏற்படும் மகிழ்வின்பத்தைப் பெறு வதிலே அண்ணா அவர்களுக்கு எப்பொழுதுமே விருப்பம் மிகுதி அண்ணா அவர்களின் கேலியும் கிண்டலும் கோழர் ராசகோபால் அவர்களை நிலை தடுமாறவைத்து மேலும் மேலும் நகையாடற்குரியவராக அவரை வைத்துவிடும். அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் இராசகோபாலை பற்றிக் குறிப்பிடும்போது, அவர், தமக்கு ஒரு 'ஞாயிற்றுக் கிழமை போன்றவர் என்று கூறுவார். அதாவது 'ஞாயிற்றுக்கிழமை எடபடிப் பொழுது போக்குவதற் குரியதொரு நாளாக விளங்குகிறதோ, அப்படித் தோழர் இராசகோபால் பொழுதுபோக்குவதற்குரிய ஒருவராக விளங்குகிறார் என்று பொருள். .
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
