பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தோழர் இராசகோபால் அவர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அறிஞர் அண்ணா அவர்கள் 'சந்திரமோகன்' நாடகத்தில் பகதூர் என்ற ஒரு நகைச்சுவை உறுப்பைப் படைத்தார்கள். நாடகத்தில் அந்த உறுப்பை ஏற்று நடிக்கும் வாய்ப்பை அண்ணா அவர்கள் தோழர் இராசகோபா அவர்களுக்கே கொடுத்தார்கள். தோழர் ராசகோபால் அவர்கள் நடித்துக்காட்டிய அந்த உறுப்பை ஏற்று வேறு யார் யாரோ நீண்டகாலமாகப் பழக்கமான நடிகர்கள்கூட நடித்துப் பார்த்தார்கள். ஆனால் தோழர் இராசகோபாலைப்போல் அவ்வளவு திறமையாக நடித்துக் காட்டியவர்கள் வேறு யாருமில்லை என்னலாம். காரணம் தோழர் இராசகோபால், அவர்களால் மட்டும்தான் அந்த உறுப்புக்குரிய நகைச்சுவையை உண்டாக்க என்பதாகும். முடியும் அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் இராசகோபால் அவர்களை ஓயாமல் கிண்டல் செய்துகொண்டேயிருப்பார். ஒருபொழுது தோழர் இராசகோபால் அவர்கள் அண்ணா விடம் வந்து தம்மை இரவு எலி ஒன்று கடித்துவிட்டதாகக் கூறினார். அண்ணா அவர்கள் சிரித்துக்கொண்டே "எலியா? உன்னையா? என்று கேட்டார்கள். ஆமாங்க! என்எனத்தான் எலி கடித்து வீட்டது!" என்று தோழர் இராசகோபால் இரக்கந் தோன்றக் கூறினார். என்று "ஊசி போடனுமேர் ஊசி போட்டாச்சா?" ண்ணா அவர்கள் சேட்க, உடனே இராசகோபால் 'இன்னும் போட்டுக்கலிங்க!" என்று கூறினார். உடனே அண்ணா "யாருக்கு ஊசி' என்று இராச கோபாலைப் பார்த்துக் கேட்டார்கள்,