பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிட்சை சமயத்தில் காய்ச்சல் அறிஞர் அண்ணா அவர்கள் பொருளாதாரப் பகுதியில் சிறப்புப் பட்டம் (பி. ஏ. ஆனர்சு) பெற்று, பின்னர் எம்.ஏ. பட்டமும பெற்றார். முதல் தடவைப் பல்கலைக் கழகப் பரிட்சைக்குச் சென்றபொழுது, அவர் தேறவில்லை. காரணம் இரண்டு தாள்கள் எழுதியதற்குப் பிறகு, அவர் மேற்கொண்டு பரிட்சைகளுக்குப் போகவில்லை. தன்னு டைய நண்பர் ஒருவருக்காகப் பரிந்துகொண்டு. முதல் இரண்டு நாட்கள் நடந்த பரிட்சையில் அண்ணா அவர்கள் மிக நன்றாக எழுதியிருந்தார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பரிட்சையில் மிக மோசமாக எழுதிவிட்டு, சோர்ந்த முகத்துடன், வெளியே வந்தார். தான தோலவியுறுவது நிச்சயம் என்றும், அதற் காக மேற்கொண்டு எழுதாமல் அந்த ஆண்டு நின்று கொண்டு மறு ஆண்டு எழுதப் போவதாகவும் நண்பர் சொன்னார். ஏனென்றால் சிறப்புப்பட்டப் பரிட்சைக்கு ஒருவர் ஒருதடவைக்கு மேல் முழுவதும் உட்காரக்கூடாது. வெற்றிபெற முடியாது என்று நினைப்பவர்கள் கடைசிப் பரிட்சைக்கு முன்னதாக நின்று கொண்டதாக அறிவித்து வீட்டு, மறு ஆண்டு பரிட்சைக்கு உட்காருவார்கள். தனது நண்பன் நன்றாக எழுதாமல் நின்றுவிடப் போவதாக சொன்னதும், அவனிடம் ரக்கங்காட்டித் தோழமை காரணமாக, தானும் அத்துடன் நின்றுவிடப் போவதாக