பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். அண்ணா அவர்கள் நன்றாகப் படித்து, முதலாவதாகத் தேர்ச்சி பெறும் வாய்ப்பைப் பெற்றிருந்தும்,நின்றுவிட்டது மற்ற மாணவர் களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நண்பனுக்காகப் பரிவுகாட்டி பரீட்சைக்குப் போகாமல் நின்றுவிட்டாலும் வீட்டிற்குப்போய் என்ன சொல்வ தெவறு அண்ணா அவர்களுக்குப் புரியவில்லை. இரு நணபர்களும கூடி யோசித்தனர். கடைசியாக காய்ச்சல் வந்துவிட்டதால் பரீட்சைக்குப் போகமுடியவில்லை என்று காரணங்காட்ட முடிவு செய்தனர். காய்ச்சலை எப்படி வரவழைப்பது? மற்றவர்கள் கல்லூரிக்குப் போனதும் அண்ணாவும் அவரது நண்பரும் குளிக்கும் அறைக்குப் போய் தண்ணீர்க குழாயைத் திருபபிட்டு, கீம்ழ உட்கார்ந்து விடுவார்களாம். தினந் தோறும் இரண்டு மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக இப்படி உட்கார்ந்திருந்தால், காயச்சல் வந்துவிடும் என்று. ஒருவாரமாகியும், அவர்கள் எவ்வளவு முயனறும, தண்ணீர் குழாயின் கீழ் தவமிருந்தும, காய்ச்சல் மட்டும் வரவில்லை. மாறாக நன்றாகத தண்ணீர்பட்டு, உடல் மினுமினு' வென்று பொலிவுடன் விளங்கியது. . பரிட்சைகள் முடிந்ததும் அண்ணா அவர்கள் வீட்டுக்குத் திரும்பாததுகண்டு, அவர்களுடையசிற்றன்னை (தொத்தா) அவர்கள் கல்லூரி விடுதிக்கு வந்து, அண்ணாவைத் தேடிப் பிடித்து அழைத்துச் செனறார்கள். மறு ஆண்டு, இருநண்பர்களும் தேர்வில் வெற்றி பெற்றனர்,