பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புத் திறமையின் நயம் நாடகமேடையில் நடிகர்கள் நடித்துக்கொண்டிருக்கும் போது, வாய் தவறிய பொருத்தமில்லாத சில சொற்களும் சில நேரங்களில் வந்து விழுந்துவிடுவதுண்டு. இத்தகைய தவற்றினின்றும் தப்பினார்கள் என்று, மிகச் சிறந்த நடிகர்களில் கூட, ஒருவரையும் சுட்டிக்காட்ட முடியாது. பொதுவாக எல்லா நடிகர்களுமே இந்தத் தவறுக்கு எப்பொழுதேனும் ஒருமுறை இரையாகியேயிருப்பார்கள். தவற்றைத் தவறு என்று பொதுமக்கள் புரிந்துகொள் பொருத்தமான சமா தானம் சொல்லித் தப்பித்துக்கொள்வது என்பது, மிகச் சிறந்த ஒருசில நடிகர்களால்தான் முடியும். சென்னை ஒற்றவாடைக் வதற்கு முன்பே, வேறு ஏதேனும் "திராவிடன்*1 கொட்டகையில், வளர்ச்சி நிதிக்காக அறிஞர் அண்ணா அவர்கள் 'சந்திரமோகன்' நாடகத்தை நடத்தினார்கள். அதில் அண்ணா அவர்கள் வழக்கம்போல் காகபட்டர்' உறுப்பை ஏற்று நடித்தார்கள். காகபட்டரும் அவரது முக்கிய சீடனும் உரையாடும் கட்டம், சீடன் குருவிடத்தில் சில ஐயப்பாடுகளைக் விளக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றான். கூறி உரையாடலின்போது காகபட்டர் சீடனைப் பார்த்து, "ஏண்டா, மண்டும் கிருஷ்ணனுக்குப் பதிவிரதைகள் யார் யார்? என்று கேட்கிறார்.