பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அதற்குச் சீடன் "பாமா. சுமத்திரை... அடுக்கிக்கொண்டு போகிறான். என்று என்று சீடன் ராதை, ருக்மணி பெயரைச் சொல்லுவாள் காகபட்டர் எதிர்பார்க்கிறார். அவன் அவர்கள் பெயர்களைச் சொல்லாமல் வேறு யார் யார் பெயரையோ சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்ட காகபட்டர் சீடனை தடுத்து "டேய்! நிறுத்துடா! அவாளெல்லாம் அவருக்கு 'எக்ச்ட்ரா' என்று ஆங்கிலச் சொல் ஒன்றை வாய்தவறிச் சொல்லிவிட்டார். நாடகம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் உடனே கொல்லென்று சிரித்துவிட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அந்தத் தவற்றினின்றும் தம்மைச் சமாளித்துக் கொள்ள "என்னடா, மண்டு! குரு என்ன புதிதாக ஆங்கிலம் பேசுகிறாரே! என்று பார்க்கிறா யோ!' என்று சீடனைப் பார்த்துக் கேட்கிறார். ஆங்கிலம் ஆமாம் சுவாமி! எப்பொழுது எப்படி கற்றுக்கொண்டீர்கள்?" என்று அவனும் அண்ணாவுக்கு ஏற்றபடி திருப்பிக் கேள்வி கேட்கிறான். 8 உடனே காகபட்டரான அண்ணா, "நமது நாட்டுக்கு இப்போ புதிதா பரங்கியாள் வந்திருக்காளே பாத்தியோ! அவாள்டேயிருந்து இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கத்துண்டுவர்ரேன்" என் விடைகூறி நிலைமையைச் சமாளித்துக்கொள்கிறார். சிவாஜி காலத்திலேயே வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள் என்ற வரலாற்று உண்மையை அடிப் படையாகக் கொண்டு நிலைமையை அண்ணா அவர்கள் சமாளித்துக் கொண்டார்கள். பிறரால் இவ்வளவு அழகாக இந்த நிலைமையைச் சமாளித்திருக்க முடியுமா? என்பது ஐயப்பாடே! அறிஞர் அண்ணாவின் நயம்பட்ட நடிப்புத் திறமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மன்றம், நாள்: 1.7.55.