பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எனது வாரிசு நீதான்!" இரண்டாவது வட்டமேசை மாநாடு இலண்டன் மாநகரில் கூடி முடிவு ஏதும் எடுக்காமல், முறிவுற்று முடிந்த வுடன் அதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதிகள் இந்தியா திரும்பினர். அவர்களில் இராமசாமி அவர்கள் சென்னை . ஒருவரான சர். ஏ. வந்துசேர்ந்தவுடன், வட்டமேசை மாநாடு பற்றிய முழு விபரங்களையும் சென்னை மக்களுக்கு விளக்கிச்சொல்ல, சென்னை நேப்பியர் பார்க்கில் பொதுக்கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது • கூட்டத்திற்கு சர்.ஏ இராமசாமி அவர்கள் இசைவு தந்து வந்திருந்தார். அந்தக் கூட்டத்திற்கு அறிஞர் அண்ணா அவர்களும் சென்றிருந்தார்கள். சர்.ஏ.இராம் சாமி அவர்கள் பேசுவதற்கு முன்னால் சிறிதுநேரம் பேசும் படி அறிஞர் அண்ணா அவர்களைக் கூட்டம் கூட்டினோர் கேட்டுக்கொண்டார்கள். அறிஞர் அண்ணா அவர்களும் பேச இசைந்து அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தில் சிறிது நேரம் பேசினார்கள். வட்டமேசை மாநாடு முறிவுற்று நாட்டின் தலைவர்கள் இந்தியா திரும்பிய அதே நேரத்தில், வெளிநாடு சென்றி ருந்த இந்திய கிரிக்கட் குழுவினர் வெற்றியுடன் திரும்பி வந்திருந்தனர். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் மனதில் மனதில் வைத்துக்கொண்டு,