நமது தலைவர்கள் வட்டமேசை மாநாடு சென்று தோல்வி யைச் சுமந்துகொண்டு வந்தாலும், கிரிக்கட் குழுவினர் வெற்றி ஏந்திக்கொண்டு வந்துள்ளனர். விவேகிகள் தேடித் தராத புகழை விளையாட்டுக்காரர்கள் தேடித் தந்துள்ளனர்" என்னும் கருத்துப்பட சர்.ஏ. இராமசாமி அவர்களை வைத்துக்கொண்டு அஞ்சாமல் அயராமல் கூறினார்கள். . சர்.ஏ. இராமசாமி அவர்கள் பேசும்போது, அறிஞர் அண்ணா அவர்கள் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விளையாட்டுக்காரர்களுக்கும் அரசியல் தலைவர் களுக்கும் ஒரு வேறுபாடுஇருக்கிறதுஎன்றும், விளையாட்டுக் காரர்கள் ஒரு குறிப்பிட்ட கோட்டிற்குள் நின்றுதான் விளையாடவேண்டும் என்றும் ஆனால் அரசியல் தலைவர் களுக்கு அப்படிப்பட்ட வரையறை ஏதும் இல்லையாதலால் வெற்றியை உறுதியாக எதிர்பார்க்க முடிவதில்லை என்றும் குறிப்பிட்டார்கள். கூட்டம் முடிந்தவுடன் சர் ஏ. இராமசாமி அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் முதுகைத் தட்டிக்கொடுத்து "ஆங்கிலப் பேச்சில் எனது வாரிசு நீயாகத்தான் இருப்பாய்' என்று கூறினார்களாம். மன்றம், நாள்:15.7.55 ஒருதலைக் காதல் 'சூரியனுக்குத் தெரிகிறதா தாமரை தன்னிடம் இலயித்தே மலருகிறது என்ற உண்மை? ஏன் மேகத்துக்குத் தெரியுமா, மயிலின் நடனத்துக் குக் காரணம் தன்னிடம் அப்பறவை கொண்ட காதல் என்று? அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
