ஒரே மேடையில் பேச போட்டியாளருக்கு அழைப்பு படிப்பை அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரிப் முடித்துவிட்டு வெளியேறிய பிறகு, நண்பர்களின் தூண்டு தலின்பேரில் சென்னை நகரசபைத் தேர்தலில் ஈடுபடும்படி நேர்ந்தது. பெத்து நாய்க்கல் பேட்டைத் தொகுதியில் காங்கிரசை எதிர்த்து, நகரசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். காங்கிரசின் சார்பாகப் 'பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் போட்டியிட்டார். அவரும் ஒரு எம். ஏ. பட்டதாரி என்றாலும், அவருக்கு அவ்வளவாகப் பேச வராது. பொதுமேடை என்றாலே அவருக்கு தாடை நடுக்கம் ஏற்பட்டுவிடும். அப்படியே அவர் பேச முயன் றாலும், ஓரிருசொற்கள் திக்கித்திக்கிப் பேசுவார். ஆனால், அறிஞர் அண்ணா அவர்களோ, அப்பொழுதே ஈடு இணை யற்ற பெரும் பேச்சாளராக விளங்கினார்கள். . பொது மக்களைப் அண்ணா அவர்கள் தேர்தல் கூட்டம் ஒன்றில பேசும் போது; பார்த்து, "நகரசபை, நீக்க வேண்டிய குறைபாடுகளையும் செய்ய வேண்டிய 'நிறை பாடுகளையும் எடுத்துச்சொல்லி, நிதிக்குப் பரிந்து பேசிச் செயலாற்ற வேண்டிய இடமாகும். இந்தப் பணியினைப் பேசும் ஆற்றல் படைத்தோரே செயலாற்றமுடியும். எனவே தேர்தலில் போட்டியிடும் எங்களிருவரையும் ஒரே மேடையில் பேசச் சொல்லிப் பார்த்து, வாரைத் தேர்ந் தெடுத்து அனுப்புவது ஏற்றது என்ற முடிவுக்கு நீங்களே T
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/90
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
