வாருங்கள்'5 90 என்னும் கருத்துப்பட குறிப்பிட்டார்கள். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களில் சிலர். ஒருநாள் காலை நேரத்தைக் குறிப்பிட்டுச், சிவஞானம் பூங்காவில், தேர்தலில் போட்டியிடும் அண்ணாவும், பால சுப்பிரமணிய முதலியாரும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்று துண்டு அறிக்கைகள் அச்சடித்து வெளிபடுத்தி விட்டனர். துண்டு அறிக்கையில் கண்டபடி குறிப்பிட்ட நாளில். குறிப்பிட்ட நேரத்தில் சிவஞானம் பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் கூடிவிட்டனர். அறிஞர் அண்ணா அவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.காங்கிரசின் சார்பாகப்போட்டியிட்ட தோழர் பாலசுப்பிரமணிய முதலி யார், அண்ணாவோடு ஒரேமேடையில் பேச அஞ்சிக்கூட்டத் திற்கு வர மறுத்து, எங்கேயோ மறைந்து இருந்துவிட்டார். தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டு வேலை செய்துவந்த காங்கிரசுத் தோழர்களுக்கு என்ன செய்வதென்று தோன்ற வில்லை.கூட்டத்தினர் "எங்கே காங்கிரசு அபேட்சகர்? "எங்கே பாலசுப்பிரமணிய முதலியார்?" என்று காங்கிரசுக் காரர்களைப் பார்த்துத் திரும்பத்திரும்பக் கேட்டீத் தொடங்கினர். நீண்டநேரமாகியும் காங்கிரசு அபேட்சகர் வராததால் அறிஞர் அண்ணா அவர்கள் மட்டுமே கூட்டத் தில் பேசி முடித்தார்கள். மக்கள் மன்றம், அண்ணாவே வெற்றி பெற்றார் என்று தீர்ப்பளித்து வெற்றிமுழக்கம் செய்தது. நேரே ஆராய்ந்து பார்த்த மக்கள் மன்றம், அறிஞர் அண்ணா அவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு அளித்தது; ஆனால் நேரே ஆராய்ந்துபார்க்காதவாக்குரிமைச் சீட்டுகள், வேறுவிதமாகப் பிற்பாடு தீர்ப்பு அளித்தன! மன்றம், நாள்:1.8.55
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/91
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
